Award Ceremony on Science Popularization - World Science Day - 2025

NEWS Hits: 170

PNSK DID IT AGAIN !!

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் இவ்வாண்டுக்குரிய விஞ்ஞான தேசிய  விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகள்  பெற்று மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிக்குடி இன்னுமொரு வரலாற்று சாதனை. 

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சு, ஆகியன இணைந்து இன்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடாத்தப்பட்ட 2024/2025 ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்று எமது பாடசாலை சாதனை படைத்துள்ளது.

1) விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில்  மாவிலையை பயன்படுத்தி வாகனப்புகையில் வெளிப்படும் நச்சு வாயுக்களின் தாக்கத்தை குறைப்பதற்காக வழிமுறை எனும் தலைப்பில் அபிட்சன் , போபிலாசினி , சப்தாஞ்சனா ஆகிய மாணவர்கள் ஆய்வினை மேற்கொண்டு தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

2) இலங்கையின் சிறந்த விஞ்ஞான கழகத்திற்கான தேசிய விருது கல்லுாரியின் அதிபர் திரு .M .சபேஸ்குமார் அவர்களிற்கு வழங்கப்பட்டது.

3)விஞ்ஞான விருதுக்கான இலங்கையின் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது எமது பாடசாலையின் இரசாயனவியல் ஆசிரியர் செல்வராஜா தேவகுமாரிற்கு  2வது தடவையாக வழங்கப்பட்டது . இவ் விருதுகளை விஞ்ஞான அமைச்சர் பேராசிரியர் அபேசிங்க வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

அத்துடன் தீவிலிருந்து இப் பாடசாலை மட்டுமே தழிழ் மொழி பாடசாலைகளில் இவ்வான்டு மூன்று தேசிய விருதுகளை பெற்றிருந்தமை என்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.

 

Print