Award Ceremony on Science Popularization - World Science Day - 2025

PNSK DID IT AGAIN !!

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் இவ்வாண்டுக்குரிய விஞ்ஞான தேசிய  விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகள்  பெற்று மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிக்குடி இன்னுமொரு வரலாற்று சாதனை. 

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சு, ஆகியன இணைந்து இன்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடாத்தப்பட்ட 2024/2025 ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்று எமது பாடசாலை சாதனை படைத்துள்ளது.

1) விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில்  மாவிலையை பயன்படுத்தி வாகனப்புகையில் வெளிப்படும் நச்சு வாயுக்களின் தாக்கத்தை குறைப்பதற்காக வழிமுறை எனும் தலைப்பில் அபிட்சன் , போபிலாசினி , சப்தாஞ்சனா ஆகிய மாணவர்கள் ஆய்வினை மேற்கொண்டு தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

2) இலங்கையின் சிறந்த விஞ்ஞான கழகத்திற்கான தேசிய விருது கல்லுாரியின் அதிபர் திரு .M .சபேஸ்குமார் அவர்களிற்கு வழங்கப்பட்டது.

3)விஞ்ஞான விருதுக்கான இலங்கையின் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது எமது பாடசாலையின் இரசாயனவியல் ஆசிரியர் செல்வராஜா தேவகுமாரிற்கு  2வது தடவையாக வழங்கப்பட்டது . இவ் விருதுகளை விஞ்ஞான அமைச்சர் பேராசிரியர் அபேசிங்க வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

அத்துடன் தீவிலிருந்து இப் பாடசாலை மட்டுமே தழிழ் மொழி பாடசாலைகளில் இவ்வான்டு மூன்று தேசிய விருதுகளை பெற்றிருந்தமை என்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.

 

The Prime Minister of Sri Lanka, Her Excellency Dr. Harini Amarasuriya, visited the school

இன்று (01.11.2025) பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடிக்கு பிரதமரும் கல்வி அமைச்சருமான கெளரவ. கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் விஜயம் செய்த போது பாடசாலைச் சமூகத்தினரால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமருடன் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான கெளரவ. கந்தசாமி பிரபு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதிக்கான அமைப்பாளர் வாணி ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது பாடசாலையின் இனியம் வாத்தியக் குழு மாணவர்கள் வாத்திய இசையுடன் நடனமாடி பிரதமரையும் ஏனைய அதிகளையும் வரவேற்றுச் சென்றனர்.

பாடசாலையின் முதல்வர் எம்.சபேஸ்குமார் அவர்களின் தலைமையுரையின் போது, இப்பாடசாலையின் நூற்றாண்டு வரலாற்றில் பிரதமர் ஒருவர் வருகைதந்தமை இதுவே முதல்தடவை எனக்குறிப்பிட்ட அவர், பிரதமருக்கு நன்றி தெரிவித்ததுடன் மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் சாதனைகள் பற்றி எடுத்துரைத்ததுடன் இச்சாதனைகள் யாவும் பல்வேறு பெளதீகவளப் பற்றாக்குறைகளின் மத்தியிலேயே நிகழ்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக சுமார் 3000 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 200 மாணவர்கள்மட்டுமே அமரக்கூடிய ஒரு ஒன்றுகூடல் மண்டபமே உள்ளதாக சுட்டிக்காட்டிப் பேசினார்.

இதன் போது அதிபரால் பிரதமருக்கு ஞாபகச்சின்னம் வழங்கப்பட்டதுன் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினராலும் பிரதமருக்கு ஞாபகச் சின்னம் வழங்கப்பட்டது. அத்துடன் மாணவி ஒருவரால் பிரதமரின் உருவத்தை பெண்சில் வர்ணத்தினால் வரைந்த ஓவியத்தையும் பிரதமருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் இனியம் வாத்தியக்குழு மாணவர்கள் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

MORE INFORMATION

https://www.battinews.com/2025/11/blog-post_2.html

 

 

Research Proposal for Student Research Program Conducted by the Department of Undergraduate Studies - University of Moratuwa

மொறட்டுவ பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் துறையினரால் நடாத்தப்பட்ட மாணவர் ஆய்வு நிகழ்ச்சித்திட்டத்தின் ஆய்வு முன்மொழிவு முன்வைப்பினை வெற்றிகரமாக பூர்த்திசெய்த எமது பாடசாலையின் மூன்று ஆய்வுக் குழுக்களைச் சேர்ந்த 15 மாணவர்கள் 17.10.2025 அன்று காலை ஒன்றுகூடலில் பாராட்டிக் கௌரவிக்கபட்டார்கள்.  தீவுமட்டத்தில் தமிழ்மொழி மூலமாக தெரிவு செய்யப்பட்ட ஒரேஒரு பாடசாலை எமது மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவ குழுக்கள் விபரமும் ஆய்வுத்தலைப்புக்களும்.

01.வீட்டுப்பாதுகாப்பிற்கான ALARM SYSTEM.
1.பிறேம்குமார்....அபினவ்
2.சிங்காரவேல்....அஸ்வின்
3.நித்தியானந்தம்..பவசாங்
4.நித்தியானந்தம்..பவிசாங்

02.ஆற்றுவாழையைப் பயன்படுத்தி உயிர் டீசல் மற்றும் பசளை தயாரித்தல்.
1.தருமலிங்கம்...சதுர்ஜன்
2.இன்பராசா....லிஹிர்தன்
3.லட்சுமன்...அஹஸ்ரினா
4.ஜீவானந்தராசா...ஸ்ரீஷாகவி
5.சிவஞானம்...மிருதங்கா

03.வாகனங்களுக்கான தானியங்கி BRAKE SYSTEM
1.கேதீஸ்வரன்.....கிரிசிகன்
2.தங்கேஸ்வரன்..கிதுஸ்காந்
3.சுந்தரராஜன்..கோசகன்
4.சுவேந்திரராஜ்..மதுசாந்
5.சிங்கராசா..மயுகேசன்
6.மகாதேவன்..யருதன்.

மேற்படி மாணவர்களை எமது பாடசாலை இரசாயனவியல் ஆசான் திரு S.தேவகுமார் அவர்கள் வழிப்படுத்தியதுடன் திரு.R.சனோஜன் மற்றும் திரு. T.கிசோக்குமார், திருமதி N. சந்திரகுமார் ஆசிரியர்களும் வழிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

TEACHER'S DAY - 2025

இன்று (15.10.2025)  எமது பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில்  ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. பாடசாலை முதல்வரின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்  பாடசாலையின் பழைய மாணவர்களும், பாடசாலை ஆசிரியர்களும் , மாணவர்களும் கலந்து கொண்டனர். 

 

Children's day - 2025

இன்று எமது பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்த சிறுவர் தினம் - 2025

 

 

Navarathiri Vila - 2025

நவராத்திரி விழா - 2025

நவராத்திரி விழாவானது எமது பாடசாலையில் ஓன்பது நாட்களும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த 22.09.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டு 02.10.2025 அன்று  விஜய தசமியுடன் இனிதே நிறைவுபெறவிருக்கின்றது.  இன்று சரஸ்வதி தேவிக்குரிய விழாவாகும். எமது பாடசாலை முதல்வரின் தலைமையில் மாணவர்களின் பஜனை பாடலுடன் கூடிய நடைபவனி இடம்பெற்றது. 

 

About PNSK

BT/PD/PADDIRUPPU MADYA MAHA VID

065 22 50111/077 783 6176

 (+94) 77 783 6176

  paddiruppummv@gmail.com

paddiruppummv.edu.lk

School Anthem

STUDENT SECTION

Sports

Extracurricular Activites

Club and Societies

Art and Culture 

Scout

 

WHO'S ONLINE

We have 109 guests and no members online

BENEFITS FOR STUDENTS

Visitors Counter

Today 4

Yesterday 6

Week 20

Month 133

All 3392

Currently are 11 guests and no members online