தேசியமட்ட விவசாய விஞ்ஞான வினாடி வினா போட்டியில் எமது பாடசாலை மாணவன் சாதனை!
2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசியமட்ட விவசாய விஞ்ஞான வினாடி வினா போட்டியில், எமது மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர் செல்வன் பிரபாகர் நிருஸ்திகன் சிறப்பான சாதனையொன்றை பெற்றுள்ளார்.
அவர் அகில இலங்கை மட்டத்தில்
• தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரிவில் 3ம் இடத்தையும்,
• தமிழ் மொழி பிரிவில் 1ம் இடத்தையும்
பெற்றுக் கொண்டு எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இம் மாணவனையும், இந்த வெற்றிக்கு வழிகாட்டி, சிறந்த பயிற்சிகளை வழங்கிய விவசாய பாட ஆசிரியர்களையும், பாராட்டுகின்ற நிகழ்வு இன்று பாடசாலை ஒன்று கூடல் நிகழ்வில் நடைபெற்றது.


