All Island Tamil Language Day Competition - 2025

இன்று நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய மட்ட போட்டியில் - 2025  தனி நடனம்- 3ம் இடம் , இலக்கிய நாடகம்-3ம் இடம்  ஆசிய இரண்டு இடங்கள் எமது பாடசாலை மாணவர்களுக்கு  கிடைக்க பெற்றுள்ளன. வெற்றியீட்டிய மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும்  வழிப்படுத்திய ஆசிரியர்கட்கும்  உளம் கனிந்த நல்வாழ்த்துகள் .

Science & Technology Quiz Competition (English Medium) - 2025

 

வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே 12.09.2025 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல விஞ்ஞான வினாடி வினா போட்டியில் வடக்கின் பல முன்னணி பாடசாலைகளை வரலாற்றில் முதன் முதலாவதாக தோற்கடித்ததுடன் கிழக்கு மாகாணத்தின் பல முன்னணி பாடசாலைகளுடன் போட்டியிட்டு தெரிவான ஒரேயொரு பாடசாலையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து பலத்த போட்டிக்கு மத்தியில் மூன்றாம் இடத்தை மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி தட்டிக் கொண்டது. இச்சாதனையினை உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் கணேசலிங்கம் யனோஜிதன், ஜீவநாயகம் ருக்சாந், சிவசுப்பிரமணியம் மிஜித், மதரதநாதன் நிவிதன் ஆகியோர் பங்கு பற்றி நிகழ்த்தியுள்ளனர். யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரினால் இம்மாணவர்களும் இவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களான திரு.செ.தேவகுமார் மற்றும் திரு.ரி. யுதர்சன் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டார்கள்.

இவர்களுக்கும், இவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டுதல்களை வழங்கி நெறிப்படுத்திய இப்பாடசாலையின் முதல்வர் திரு. எம்.சபேஸ்குமார் அவர்களுக்கும் நாமும் கெளரவமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Open international Karate Championship - Ministry of Sports

இப் போட்டியானது கடந்த 24/05/2025 ஆந் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்கள் பங்கு பற்றி வெற்றிபெற்றிருந்தனர். பயிற்றுவித்த ஆசிரியருக்கும் நன்றிகள்.

1) J.Tharunis - 3rd place , Cartus Boys - Under-13
    J.Tharunis - 1st place , Karate - Fight role - under - 13


2) I.Jisnuthan - 3rd place , Cartus , Boys under 12

3) T.Thivya - 1st Place, Cartus, Girls under 18, Senior level - 05
    T.Thivya - 1st place, Kumite, Girls under 18 Senior level - 05, 45Kg Event

4) K.Anusharuthni - 1st place, junior Kumite, Girls level - 01,  43Kg Event
    K.Anusharuthni -1st place, junior Cartus, Girls level - 01.

5) J.Kiruththikasan - 2nd Place , sub junior Kumite Boys Level - 01, (Age 11)

 

Our School Student's Achievement in the National-Level Agricultural Science Quiz Competition

தேசியமட்ட விவசாய விஞ்ஞான வினாடி வினா போட்டியில் எமது பாடசாலை மாணவன் சாதனை!

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசியமட்ட விவசாய விஞ்ஞான வினாடி வினா போட்டியில், எமது மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர் செல்வன் பிரபாகர் நிருஸ்திகன் சிறப்பான சாதனையொன்றை பெற்றுள்ளார்.

அவர் அகில இலங்கை மட்டத்தில்
• தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரிவில் 3ம் இடத்தையும்,
• தமிழ் மொழி பிரிவில் 1ம் இடத்தையும்
பெற்றுக் கொண்டு எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம் மாணவனையும், இந்த வெற்றிக்கு வழிகாட்டி, சிறந்த பயிற்சிகளை வழங்கிய விவசாய பாட ஆசிரியர்களையும், பாராட்டுகின்ற நிகழ்வு இன்று பாடசாலை ஒன்று கூடல் நிகழ்வில் நடைபெற்றது.

 

A set of computers was donated to students - COMMERCIAL BANK

கடந்த புதன்கிழமை (23.07.2025) எமது பாடசாலையின் கற்றல் கற்பித்தல் பணிகளுக்காக Commerical Bank இனால் ரூபாய் 35 லட்சம் பெறுமதியான 15 கணினித் தொகுதிகளுடன் அனைத்து உபகரணங்களும்  அன்பளிப்பு செய்யப்பட்டது . அவர்களுக்கு மனப்புர்வமான நன்றிகள்.

Job Week Activities - Scout

மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி சாரண மாணவர்கள் இந்த வாரத்தில் இரு குழுக்களாக பிரிந்து JOB WEEK செயற்பாடுகள் ஈடுபட்டுள்ளார்கள். களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த 08 மாணவர்கள் களுவாஞ்சிகுடியை அண்மித்த பகுதிகளிலும் எருவில் மகிழூர் பிரதேசத்தை அண்மித்த மாணவர்கள் எருவில் பகுதியிலும் JOB CARD உடன் தங்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

 

About PNSK

BT/PD/PADDIRUPPU MADYA MAHA VID

065 22 50111/077 783 6176

 (+94) 77 783 6176

  paddiruppummv@gmail.com

paddiruppummv.edu.lk

School Anthem

STUDENT SECTION

Sports

Extracurricular Activites

Club and Societies

Art and Culture 

Scout

 

WHO'S ONLINE

We have 36 guests and no members online

BENEFITS FOR STUDENTS

Visitors Counter

Today 6

Yesterday 6

Week 22

Month 135

All 3394

Currently are 11 guests and no members online