

வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே 12.09.2025 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல விஞ்ஞான வினாடி வினா போட்டியில் வடக்கின் பல முன்னணி பாடசாலைகளை வரலாற்றில் முதன் முதலாவதாக தோற்கடித்ததுடன் கிழக்கு மாகாணத்தின் பல முன்னணி பாடசாலைகளுடன் போட்டியிட்டு தெரிவான ஒரேயொரு பாடசாலையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து பலத்த போட்டிக்கு மத்தியில் மூன்றாம் இடத்தை மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி தட்டிக் கொண்டது. இச்சாதனையினை உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் கணேசலிங்கம் யனோஜிதன், ஜீவநாயகம் ருக்சாந், சிவசுப்பிரமணியம் மிஜித், மதரதநாதன் நிவிதன் ஆகியோர் பங்கு பற்றி நிகழ்த்தியுள்ளனர். யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரினால் இம்மாணவர்களும் இவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களான திரு.செ.தேவகுமார் மற்றும் திரு.ரி. யுதர்சன் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டார்கள்.
இவர்களுக்கும், இவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டுதல்களை வழங்கி நெறிப்படுத்திய இப்பாடசாலையின் முதல்வர் திரு. எம்.சபேஸ்குமார் அவர்களுக்கும் நாமும் கெளரவமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
